இதே நாளில் அன்று

Added : நவ 30, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

நவம்பர் 30, 2012 ஐ.கே.குஜ்ரால்:

பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலம், ஜீலம் நகரில், 1919 டிச., 4ல் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரான இவர், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில், ௧௯௭௫ல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். காங்கிரசில் இருந்து விலகி, ௧௯௮௦ல், ஜனதா தளத்தில் இணைந்தார். வி.பி.சிங் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். பின், 1996ல், பிரதமர் தேவகவுடா தலைமையிலான, ஐக்கிய முன்னணி அரசில், மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சரானார். 1997ல், தேவகவுடாவுக்கு, காங்., எதிர்ப்பு தெரிவிக்கவே, 1997 ஏப்., 21ல், பிரதமராக குஜ்ரால் பதவியேற்றார்.இவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும், சில மாதங்களில், காங்., விலக்கியதால், ௧௯௯௮ல், மீண்டும் லோக்சபா தேர்தல் வந்தது. அதுவரை, 11 மாதங்கள், பிரதமராக பதவியில் இருந்தார். 2012 நவ.,30ல், காலமானார்.அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X