சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வளவனுார் அருகே விபத்து லாரி டிரைவர் பரிதாப பலி

Added : நவ 30, 2019
Advertisement

விழுப்புரம், : வளவனுார் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், சென்னையைச் சேர்ந்த லாரி டிரைவர், இறந்தார்.

சென்னை, ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ராஜா,25; லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். சீர்காழியில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க, சென்னையில் இருந்து கடந்த 28ம் தேதி யமஹா மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலையில் உள்ள பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரில் வந்த டாடா ஏசி வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து, அவரது மனைவி பவானி கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X