சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 30, 2019
Advertisement

திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூ., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வதிட்டபுரம் கிளை செயலர் தேவா தலைமை தாங்கினார். சின்னசாமி, கபிலன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், முருகையன், மங்களூர் ஒன்றிய செயலர் நிதி உலகநாதன், நகர செயலர் செல்வராசு பேசினர்.வதிட்டபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை புதியதாக கட்டித் தர வேண்டும். பழுதடைந்த நிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும். வதிட்டபுரத்திலிருந்து மேலத்தெரு வரை குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளை நிர்வாகிகள் ஸ்ரீதர், தங்கதுரை, சின்னதுரை, புகழேந்தி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X