பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் வேலை வாய்ப்பு முகாம்: 194 பேருக்கு பணி நியமன ஆணை

Added : நவ 30, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில், 194 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் சார்பில், சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.இதில், 14 தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, 936 காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். முகாமில், 103 பொறியியல் பட்டதாரிகள், 303 அறிவியல் மற்றும் கலை பட்டதாரிகள், 115 அறிவியல் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள், 50 மருத்துவத்துறையில் நர்சிங், பார்மஸி போன்ற துறைகளில் பயின்றவர்கள் உட்பட 417 பேர் கலந்து கொண்டனர்.

இதில், தேர்வான 194 நபர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பாலமுருகன், பணி நியமன உத்தரவை வழங்கினார்.ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X