பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
திட்டக்குடி : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். கிருஷ்ணன், மணி, கவிதா, கோமதி முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்பு நல சங்க மாவட்ட

திட்டக்குடி : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணன், மணி, கவிதா, கோமதி முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்பு நல சங்க மாவட்ட அமைப்பாளர் கற்பனைசெல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.விவசாய சங்க துணை தலைவர் அன்பழகன், நகர செயலர்கள் வரதன், பாலு மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். வைத்தியநாத சுவாமி கோவில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் சுற்றுசுவர் கட்டி பாதுகாக்க வேண்டும்.திட்டக்குடியில் உள்ள செக்கான்குட்டை, கைக்கோளர் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். திட்டக்குடியில் உயர்த்தப்பட்டுள்ள தண்ணீர்வரி, வீட்டுவரியை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X