பொது செய்தி

தமிழ்நாடு

பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 30, 2019
Advertisement

பெண்ணாடம் : கனமழை காரணமாக பெலாந்துறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பெண்ணாடம் பகுதி கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 234 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவது வழக்கம். மேலும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 18 பாசன ஏரிகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக ஆணைவாரி, உப்பு ஓடைகளில் வழியாக வந்த மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 5:30 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 700 கனஅடி நீர்வரத்தும், அதில், வெள்ளாற்றில் 650 கனஅடியும், பாசன ஏரிகளுக்கு 50 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X