விருத்தாசலம் : மாயமான மனைவியை மீட்டுத் தரக்கோரி, கணவர் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம், 47; கட்டட மேஸ்திரி.இவரது முதல் மனைவி இறந்து விட்டதால், உறவினர் மகளான தமிழ்மணி, 37, என்பவரை, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லை.இந்நிலையில், தன்னுடன் பணிபுரிந்து வந்த மணலுாரை சேர்ந்த கொத்தனார் நடராஜன் என்பவர், ஆசை வார்த்தை கூறி மனைவியை கடத்திச் சென்று விட்டதாக ராஜாராம் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.