திண்டிவனம் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
திண்டிவனம் டி.எஸ்.பி., கனகேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று பாஞ்சாலம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட 2,400 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்தது, கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன் மகன் அய்யப்பன்,24; என்று தெரிந்தது.இவர், மதுபாட்டில்களை யூரியா மூட்டைகளுக்கு அடியில் வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அய்யப்பனை கைது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.