சிதம்பரம் : அண்ணாமலை பல்லைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பொருட்டு, நேற்று இரவு, சிதம்பரம் வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு, ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, இன்று காலை 10.30 மணிக்கு, சாஸ்திரி அரங்கில் நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து, செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிதம்பரத்திற்கு, இரவு 8.30 மணிக்கு, கவர்னர் வருகை தந்தார். அவரை, கலெக்டர் அன்புச்செல்வன், பல்கலை துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
சப் கலெக்டர் விசு மகாஜன், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி செல்வநாராயணன் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார், திருச்சி ரயில்வே எஸ்பி., செந்தில்குமார், கடலுார் கூடுதல் எஸ்.பி., பாண்டியன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பின்னர், கார் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸ்சிற்கு சென்று, இரவு தங்கினார். இன்று காலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.