புதுச்சேரி : 'இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள போனஸ் தொகையை வழங்க வேண்டும்' என, புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சங்கத்தின் தலைவி பரமேஸ்வரி, செயலாளர் பூங்கோதை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, 2018-19ம் ஆண்டிற்கான கருணைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர், சமூகநலத் துறை அமைச்சர், செயலர், இயக்குனர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும், 2017-18, 2018-19ம் ஆண்டிற்கான போன்ஸ், அங்கன்வாடிகளில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதை அரசின் கவனத்துக் கொண்டு வருகிறோம்.
இந்த போனஸ், மற்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. எனவே, இரண்டு ஆண்டுக்கான போனஸ் தொகையை அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் வழங்குவதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.