இந்தியா

சட்டசபையை முற்றுகையிட முயன்ற வி.சி.க.,வினர் கைது

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி, : சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களை கைது செய்ய வேண்டும். அவரது இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டுவர நீதி விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அக்கட்சியினர் கம்பன் கலையரங்கில் நேற்று ஒன்று கூடி துணை பொது செயலாளர் பாவாணன் தலைமையில் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் அரசு பொதுமருத்துவமனை எதிரில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஏகவள்ளி, அன்பரசன், விடுதலைவளவன், மலரவன், தீந்தமிழன், ஆற்றலரசு, செந்தமிழ்வளவன் உள்ளிட்ட 250 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X