இந்தியா

கோரிமேடு சாலையில் உடைந்து விழும் மின் கம்பங்கள்

Added : நவ 30, 2019
Advertisement
 கோரிமேடு சாலையில் உடைந்து விழும் மின் கம்பங்கள்

புதுச்சேரி : கோரிமேடு சாலையில், சென்டர் மீடியனில் உள்ள மின் கம்பங்கள் அடிப்பகுதி செரித்து அடிக்கடி உடைந்து விழுவது தொடர்கிறது.

புதுச்சேரியில் சுங்கச்சாவடி கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சாலையாக கோரிமேடு சாலை உள்ளது. இச்சாலையில் சென்டர் மீடியனில் மின் விளக்கு கம்பங்கள் உள்ளது.இரும்பு கம்பங்களான இவைகளில் பெரும்பாலான கம்பங்களின் அடிப்பகுதி துரு பிடித்து செரித்துள்ளது. அதனால் கம்பங்கள் கீழே விழுந்தும் வருகிறது. அந்த வகையில் கடந்த 14ம் தேதி, பகல் 12:00 மணியளவில், தட்டாஞ்சாவடி புனித பாத்திமா ஆலய சந்திப்பில் ைஹமாஸ் விளக்கு கம்பம் திடீரென சரிந்து புதுச்சேரி-கோரிமேடு சாலை விழுந்தது.

அதே போன்று நேற்று மாலை ஜிப்மர் அருகே கோரிமேடு போலீஸ் நிலையம் எதிரில் இருந்த மின் கம்பம், உடைந்து சாலையில் விழுந்தது. இதனையடுத்து அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த வந்த தட்டாஞ்சாவடி மின்துறை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, கம்பத்தை அப்புறப்படுத்தினர்.

அதையடுத்து போக்குவரத்து சீரானது.மின் கம்பம் விழுந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வராததாலும், சாலையில் பொதுமக்கள் செல்லாததாலும் பாதிப்பு ஏதும் இல்லை. எனவே, பல இடங்களில் மின் கம்பங்கள் அடிப்பகுதி துருப்பிடித்து உடையும் நிலையில் இருப்பதால் மின் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து, அதுபோன்ற கம்பங்களை அகற்றவும், இருக்கும் கம்பத்திற்கு தற்காலிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பாதிப்பு ஏற்படும் முன்பே மின்துறை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X