இந்தியா

விடுதலைப்போராட்ட வீரர் நுாற்றாண்டு துவக்க விழா

Added : நவ 30, 2019
Advertisement

திருபுவனை : புதுச்சேரி விடுதலைப்போராட்ட வீரர் கலிதீர்த்தாள்குப்பம் நாராயணசாமியின் நாற்றாண்டு துவக்க விழா மதகடிப்பட்டு கடை வீதியில் நேற்று நடந்தது.

இந்திய கம்யூ., திருபுவனை தொகுதிக்குழு சார்பில் நடந்த விழாவிற்கு தொகுதி செயலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். துணை செயலர் குப்புசாமி முன்னிலை வகித்தார். விடுதலைப்போராட்ட வீரர் நாராயணசாமியின் மகன் பிரகாஷ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா.கலைநாதன், கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம், மாநிலக்குழு உறுப்பினர் ரவி, சாரங்கன், அருணாசலம் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தொகுதிக்குழு நிர்வாகிகள் பிரகாஷ், பத்மநாதன், தனசேகரன், ராமசாமி, முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்தியமுத்துராஜா நன்றி கூறினார்.நுாற்றாண்டு விழாவையொட்டி மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், டிபிஜி நகர், சன்னியாசிக்குப்பம், கொத்தபுரிநத்தம், திருவாண்டார்கோயில் ஆகிய பகுதிகளில் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X