இந்தியா

பா.ஜ., மாவட்ட தலைவராக வக்கீல் அசோக்பாபு தேர்வு

Added : நவ 30, 2019
Advertisement
 பா.ஜ., மாவட்ட தலைவராக வக்கீல் அசோக்பாபு தேர்வு

புதுச்சேரி : புதுச்சேரி நகர மாவட்ட பா.ஜ., தலைவராக வக்கீல் அசோக்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுச்சேரி மாநில பா.ஜ.,வில் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, கிளை அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதன் தொடர்ச்சியாக, மாவட்ட தலைவர் தேர்தல் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகர மாவட்ட பா.ஜ., தலைவர் தேர்தல், ராம் இண்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். தேர்தல் அதிகாரி செல்வம் தேர்தலை நடத்தினார்.

பொதுச்செயலர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தேர்தலில் நகர மாவட்ட தலைவராக வக்கீல் அசோக்பாபு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, மாநில தலைவர் சாமிநாதன், தேர்தல் அதிகாரி செல்வம் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X