இலவச திடக்கழிவு மேலாண்மை படிப்பு டிச., 13க்குள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

இந்தியா

இலவச திடக்கழிவு மேலாண்மை படிப்பு டிச., 13க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : நவ 30, 2019

புதுச்சேரி : புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் நடத்தும், இலவச திடக்கழிவு மேலாண்மை படிப்புக்கு, விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாசுக் கட்டுப்பாடு குழும உறுப்பினர் செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம், புதுச்சேரி சுற்றுச்சூழல் தகவல் மையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இணைந்து,பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச சான்றிதழ் படிப்பை வரும் ஜனவரியில் நடத்துகிறதுஇரண்டு மாத படிப்பான 'திடக்கழிவு மேலா ண்மை' ஜன., 6ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதில் சேர, அறிவியலில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். 21 வயதுக்கு மிகாதவர்கள் வரும் டிச., 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.www.gsdp--envis.gov.in என்ற இணைய தளத்திலும், envis.pon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள புதுச்சேரி மாசுக் கட்டுப்பாடு குழுமம் மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மையத்தை 0413 2201256 என்ற தொலைபேசியிலும், 7598348294, 8056972562 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X