இந்தியா

காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

Added : நவ 30, 2019
Share
Advertisement
புதுச்சேரி : அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காசநோய் தடுப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. காசநோய் தடுப்பு திட்ட துணை செவிலியர் பீனா வரவேற்றார். மருத்துவ அதிகாரி பிரியங்கா தேவி, சுகாதார ஆய்வாளர் பன்னீர் செல்வம், பெண் சுகாதார மேற்பார்வையாளர் தேன் மொழி முன்னிலை வகித்தனர்.அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அதிகாரி

புதுச்சேரி : அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காசநோய் தடுப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காசநோய் தடுப்பு திட்ட துணை செவிலியர் பீனா வரவேற்றார். மருத்துவ அதிகாரி பிரியங்கா தேவி, சுகாதார ஆய்வாளர் பன்னீர் செல்வம், பெண் சுகாதார மேற்பார்வையாளர் தேன் மொழி முன்னிலை வகித்தனர்.அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அதிகாரி தாரணி தலைமை தாங்கி, காச நோய் என்றால் என்ன, அதன் வகைகள் மற்றும் நுரையீரல் காச நோயின் முதன்மையான அறிகுறிகள் குறித்து பேசினார்.தேசிய புகையிலை தடுப்பு திட்ட ஆலோசகர் சிவசண்முகம், புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜெகநாதன், திலகவதி காசநோயை எவ்வாறு தடுக்கலாம், காச நோயை கட்டுப்படுத்துவதில் நம்முடைய பங்கு என்ன என்பது குறித்து பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X