இந்தியா

முத்தியால்பேட்டை பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

Added : நவ 30, 2019
Share
Advertisement
புதுச்சேரி : முத்தியால்பேட்டை காமராஜ் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், காந்தி 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி, பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மரிய பவுலின் தலைமை தாங்கினார்.உணவு திருவிழாவில், 'அடுப்பில்லா சமையல்' என்ற தலைப்பில்புரூட் சாலட், அவல் கேக் போன்றவற்றை ஆசிரியர் மரி மார்ட்டின் வழிகாட்டுதல்படி 6ம் வகுப்பு மாணவர்கள்

புதுச்சேரி : முத்தியால்பேட்டை காமராஜ் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், காந்தி 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி, பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் மரிய பவுலின் தலைமை தாங்கினார்.உணவு திருவிழாவில், 'அடுப்பில்லா சமையல்' என்ற தலைப்பில்புரூட் சாலட், அவல் கேக் போன்றவற்றை ஆசிரியர் மரி மார்ட்டின் வழிகாட்டுதல்படி 6ம் வகுப்பு மாணவர்கள் காட்சிப்படுத்தினர். ஏழாம் வகுப்பு மாணர்வகள், ஆசிரியர் மதியழகன் வழிகாட்டுதல்படி, பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளான கேழ்வரகு, கம்பு, வரகு ஆகியவற்றை பயன்படுத்தி களி, புட்டு, அடை, உப்புமா, பாயாசம் போன்றவற்றை காட்சிப்படுத்தினர்.

ஆசிரியர் ஜெயக்கொடி வழிகாட்டுதலில் 8 ம் வகுப்பு மாணவர்கள் துரித உணவுகளை தவிர்ப்பதன் அவசியம் குறித்து காட்சிப்படுத்தி விளக்கினர்.பள்ளி மேலாண்மை குழு தலைவி பச்சையம்மாள் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X