இந்தியா

மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருது

Added : நவ 30, 2019
Advertisement
 மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருது

புதுச்சேரி : மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில விருது வழங்க, அமைச்சர் கந்தசாமி முன்னிலையில், இறுதிக்கட்ட தேர்வு நடந்தது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சமூக நலத்துறை மூலம் ஆண்டு தோறும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல, மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படும் அமைப்பினருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.அந்த வகையில் புதுச்சேரியில் இந்த ஆண்டு விருதுக்கு மாற்றுத்திறனாளிகள் முதற்கட்ட தேர்வு, கடந்த 6 ம் தேதி நடந்தது.அதனைத் தொடர்ந்து, மாநில விருது பெறும் தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யும் இரண்டாம் கட்டத் தேர்வு புதுச்சேரி சட்டசபையில் உள்ள கமிட்டி ஹாலில் நேற்று நடந்தது.

முதல் நிலை தேர்வில் தகுதி பெற்ற 45 மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சமூக நலத்துறை செயலர் ஆலிஸ் வாஸ், தொழிலாளர் ஆணையர் வல்லவன், இயக்குனர் சாரங்கபாணி மற்றும் தேர்வு குழுவினர் பங்கேற்றனர்.விருதுக்கு தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வரும் டிச. 3ம் தேதி ஜெயராம் மண்டபத்தில் நடைபெறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.சமூக நலத்துறை துணை இயக்குனர் கலாவதி, கண்காணிப்பாளர் அல்லிமுத்து, துறை சார்ந்த அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X