இந்தியா

பள்ளிக்கு துப்புரவு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அமைந்துள்ள காந்தி மேல்நிலைப் பள்ளிக்கு, சேதராப்பட்டு எல் அண்ட் டி நிறுவனத்தின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், குப்பை அள்ளும் தள்ளு வண்டி, மண்வெட்டி உள்ளிட்ட துப்புரவு உபகரணங்கள், அலமாரி, மாணவ, மாணவியர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வானூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் முரளி, தொ.மு.ச., அமைப்பாளர் அண்ணா அடைக்கலம், ஒன்றிய அமைப்பாளர் பாலு, வட்ட அமைப்பாளர் ராமதாஸ், எல் அண்ட் டி தொ.மு.ச., தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., உபகரணங்களை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், எல் அண்ட் டி தொ.மு.ச., நிர்வாகிகள் சித்ரவேல், கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கரன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X