இந்தியா

நடைபெறுமா! அரிக்கமேட்டில் மீண்டும் அகழாய்வு... வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 30, 2019
Advertisement
 நடைபெறுமா! அரிக்கமேட்டில் மீண்டும் அகழாய்வு... வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி : தமிழக அரசினை போன்று வரலாற்று புதையலான அரிக்கமேட்டில் மீண்டும் அகழாய்வு செய்து, மாநில அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் அரியாங்குப்பத்தையொட்டி அரிக்கமேடு உள்ளது. ஆறும், கடலும் கலக்கும் கழிமுக பகுதியாக உள்ள இவ்விடத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கிருந்து ரோமாபுரி, கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தக கப்பல்கள் சென்று வந்துள்ளன.இந்தியாவில் உள்ள பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. தற்போது அந்த இடத்தில் துறைமுகமும், கட்டடங்களும் முற்றிலும் அழிந்து கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. இங்கு 1945ம் ஆண்டு முதன் முதலில் ராபர்ட் எரிக் மார்டீனர் என்பவர் தலைமையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது துறைமுக மதில் சுவர், கட்டட துாண்கள், துறைமுகத்தின் இடிபாடுகள் போன்றவை புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், ஐரோப்பியர்கள் பயன்படுத்திய முத்து போன்ற பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்கால பொருட்கள் புதைந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.அதன்பிறகு 1989ம் ஆண்டு முதல் 1994 வரை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது ஏராளமான வரலாற்று ஆதாரங்களாக பல்வேறு பொருட்கள் கிடைத்தன. அதன் மூலம் இந்த துறைமுகம் கி.மு.300 ஆண்டுகளில் இருந்தே செயல்பட்டு வந்ததும், கி.பி. 1800ம் ஆண்டு வரை முக்கியத்தும் வாய்ந்த பகுதியாகவே இருந்து வந்துள்ளது. அதன்பிறகு அழிந்தது தெரிய வந்தது.

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிக்கமேடு, தற்போது பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது. அங்கு நடைபெற்று வரும் மணல் கொள்ளையால், வரலாற்று சின்னங்கள் அழியும் நிலை உருவாகி உள்ளது.வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மத்திய தொல்லியல் துறையோ அல்லது மாநில அரசோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகத்தில் அண்மையில் கீழடியில் நடந்த அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது.

அங்கு கிடைத்த அகழாய்வு பொருட்களை கொண்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் ரூ.12.21 கோடி உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததோடு, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.ரோமாபுரி, கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி தொடர்பில் இருந்த அரிக்கமேடு மீண்டும் அகழாய்வு செய்யப்படாமல் உள்ளது வரலாற்று ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.அகழ்வராய்ச்சி செய்தால் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தின் வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆதலால், அகழாய்வு செய்து, அரிக்க மேட்டை பாதுகாக்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்ணடுக்கியலில் முதல் தளம்அரிக்கமேட்டு தொல்லியல் அகழாய்வுகள் மண்ணடுக்கியல் (stratigraphy) நெறிமுறையைப் பயன்கொண்டு செய்யப்பட்ட முதல் தளமாகும். இத்தளத்தை கி.மு. 2ம் நுாற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நுாற்றாண்டு வரையானது என கணக்கிட்டுள்ளனர். அகழாய்வில் பெரும் எண்ணிக்கையில் பானை ஓட்டு பிராமிப் பொறிப்புகள், ரோமர் மட்கலங்கள், ரோமக் காசுகள், ரோமர் குடியேற்றங்கள் ஆகியன கண்டறியப்பட்டன. இதன் காலக் கணக்கீட்டை கருப்பு - சிவப்பு நிற மட்கலன்கள், ரோமக் காசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தி ஆராயப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X