இந்தியா

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் பற்றாக்குறையா?

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : 'அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து பற்றாக்குறை கிடையாது; தேவையான மருந்துகள் அனைத்தும் வாங்கி தரப்பட்டுள்ளது' என, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் கூறினார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், நோயாளிகள் கேட்டால் சில மருந்துகள் தரப்படுவதில்லை எனவும் தகவல் வெளியானது. இதுகுறித்து, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் மருந்துக்கள் தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியமான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவுக்கு உள்ளது.குறிப்பாக, நீரிழிவு நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான மருந்துகளும் தேவைக்கேற்ப வாங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் அனைத்துக்கும் தேவையான மருந்துகளை வாங்குவதற்கான நிதியை அரசு ஒதுக்கி தந்துள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை.சில நாட்களுக்கு முன் மருந்து தொடர்பாக பிரச்னை எழுந்தது. அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது.இவ்வாறு, மோகன்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X