இந்தியா

சிறுவியாபாரிகள் ஓய்வூதிய திட்டம் சிறப்பு முகாம்

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : பிரதான் மந்திரி சிறு வியாபாரிகள் ஓய்வூதிய திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்று 30ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்துதொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை மூலமாக பிரதான் மந்திரி சிறு வியாபாரிகள் ஓய்வூதிய திட்டத்தில் சிறு வியாபாரிகள் சேர்ந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக ஓய்வூதிய வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு பயனாளிகள் சேர்க்கை முகாம் இன்று 30 ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை நடக்கிறது.இத்திட்டத்தில்சுய தொழில்புரியும் கடை உரிமையாளர்கள், பணிமனை உரிமையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், தரகு வணிகர்கள், மனை விற்பனை இடைத் தரகர்கள், சிறு உணவக உரிமையாளர்கள், இதர சிறு வியாபாரிகள் சேரலாம்.

இத்திட்டத்தில் சேர 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். வியாபார பணிபரிமாற்றம் ஆண்டிற்கு 1.5 கோடி மிகாமல் இருக்க வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது இ.எஸ்.ஐ.,பி.எப் திட்டத்தில் உள்ளவர்கள், வருமான வரி மதிப்பீட்டுற்கு உட்பட்டவர்கள் இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.பதிவு கட்டணமாக நபர் ஒருவருக்கு30 ரூபாய் மத்திய அரசே செலுத்தும். இத்திட்டத்தில் சேரும் பயனாளிகள் வயதிற்கேற்ப மாதம் 55 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை 60 வயது வரை செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் கீழ் 60 வயது பூர்த்தியடையும் போது குறைந்தது 3.000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறும்போது சம்பந்தப்பட்ட நபர் இறக்கும்பட்டசத்தில் அவரது மனைவி, அல்லது கணவன் 50 சதவீத ஓய்வூதிய தொகையை குடும்ப ஓய்வூதியமாக பெறலாம்.ஆதார் அட்டை மற்றும் ஐ.எப்.எஸ்.சி., குறியீடு உள்ள சேமிப்பு, ஜன் தன் வங்கி கணக்கு ஆவணங்களுடன் முதல் தவணை தொகையுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகலாம்.இதன் துவக்க விழா இன்று 30ம் தேதி காலை 11:00 மணிக்கு தொழிலாளர் துறை வளாகத்தில் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X