இந்தியா

மலேசியாவில் சர்வதேச மாநாடு

Added : நவ 30, 2019
Advertisement
 மலேசியாவில் சர்வதேச மாநாடு

புதுச்சேரி : மலேசியாவில், நானோ தொழில்நுட்பம் தொடர்பாக நடந்த சர்வதேச மாநாட்டில், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் சண்முகானந்தம் பங்கேற்று உரையாற்றினார்.

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்பம், லேசர் ஒளியியல் மற்றும் நானோ பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு நடந்தது. மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு, புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணு பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் சண்முகானந்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்ற அவர், 'டெராெஹர்ட்ஸ் ஆண்டெனா' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.பேராசிரியர் சண்முகானந்தம், இந்தியாவில் முதன் முறையாக 6ஜி அலைவரிசைக்கான டெராெஹர்ட்ஸ் ஆண்டெனாவை வடிவமைத்துள்ளார். வரும் 2030ம் ஆண்டில் தகவல் தொடர்பு துறையில் 6ஜி அலைவரிசையில் டெராெஹர்ட்ஸ் ஆண்டெனாக்கள் முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆன்டெனா துறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சண்முகானந்தம், பல சிறப்பு ஆண்டெனாக்களை வடிவமைத்துள்ளார்.

திருச்சி என்.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில் பி.எச்டி., தங்கப் பதக்கம் பெற்றவர்.மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பேராசிரியர் சண்முகானந்தத்துக்கு, துணைவேந்தர் குர்மீத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X