சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷவாயு தாக்கி ஆலை உரிமையாளர் மயக்கம் காப்பாற்ற முயன்ற கூலித்தொழிலாளி பலி

Added : நவ 30, 2019
Share
Advertisement
ஆத்துார், தனியார் சேகோ ஆலையிலுள்ள, கழிவுநீர் தொட்டியை திறந்தபோது, விஷ வாயு தாக்கியதில், ஆலை உரிமையாளர் மயக்கமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கூலித்தொழிலாளி பலியானார். மேலும், மூன்று தொழிலாளிகள் மயக்கமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, நடுவலுார் ஊராட்சி, பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், 65. இவருக்கு சொந்தமான சேகோ ஆலையில், மரவள்ளி கிழங்கு அரவை செய்து,


ஆத்துார், தனியார் சேகோ ஆலையிலுள்ள, கழிவுநீர் தொட்டியை திறந்தபோது, விஷ வாயு தாக்கியதில், ஆலை உரிமையாளர் மயக்கமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கூலித்தொழிலாளி பலியானார். மேலும், மூன்று தொழிலாளிகள் மயக்கமடைந்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, நடுவலுார் ஊராட்சி, பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், 65. இவருக்கு சொந்தமான சேகோ ஆலையில், மரவள்ளி கிழங்கு அரவை செய்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி செய்யப்படுகிறது.
நேற்று மாலை, 5:30 மணிக்கு கூலித்தொழிலாளிகளான ஆத்துார், அம்மம்பாளையம் கண்ணன் நகரை சேர்ந்த மணி, 40, பள்ளக்காடு காங்கமுத்து, 40, கலியன், 48, நடுவலுார் வேலாயுதம், 45, ஆகியோர், அங்குள்ள கழிவுநீர் தொட்டியிலிருந்து, நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட முயன்றனர். அப்போது, தொட்டியின் மூடியை திறந்தவுடன், விஷவாயு தாக்கியதில், ஆலை உரிமையாளர் மாணிக்கம் மயங்கி, தொட்டிக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்றபோது, தொழிலாளி மணி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மற்ற மூன்று தொழிலாளிகளும் மயக்கமடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X