இந்தியா

பணி நிரந்தரம், பதவி உயர்வு வழங்க பல்கலைக்கூட ஊழியர்கள் கோரிக்கை

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம், பல்கலை கூட வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் ஆனந்த கணபதி, பாலசுப்பரமணியன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக சங்கத் தலைவராக சண்முகம், துணைத் தலைவராக ஜெயந்தி, செயலாளராக நக்கீரன், இணை செயலாளராக குமாரவேல், பொருளாளராக ஞானசேகரன், செயற்குழு உறுப்பினர்களாக பாமாவதி, பெருமாள், சரஸ்வதி, மார்கண்டன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனே வழங்கிட வேண்டும், தகுதியான ஊழியர்களுக்கு எம்.ஏ.சி.பி., வழங்க வேண்டும், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை, மாலை நேர பயிற்றுனர்களை கொண்டு நிரப்ப வேண்டும், காலியாக உள்ள முதுநிலை உதவியாளர் பணிகளை, இளநிலை உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும், உதவியாளர் பணியிடங்களை முதுநிலை உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும், தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X