இந்தியா

'போதை' மாணவர்களை மீட்க நடவடிக்கை

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில், அமைச்சர் கமலக்கண்ணன் தீவிரமாக இறங்கி உள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்வதில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சாக்லெட் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் புதிய புதிய போதைப் பொருட்களை மாணவர்களை குறிவைத்து விற்பதும் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து, கல்வி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனால், கவலை அடைந்துள்ள அவர், போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.

முதல்கட்டமாக, மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் போதைப் பொருட்களை அடையாளம் கண்டுபிடிப்பது குறித்தும், போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை எப்படி மீட்பது என்பது குறித்தும் அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடுவிடம், அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தி உள்ளார்.அடுத்தக்கட்டமாக, போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக, டி.ஜி.பி., உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X