மண்வள அட்டை வழங்கல் | Dinamalar

இந்தியா

மண்வள அட்டை வழங்கல்

Added : நவ 30, 2019

நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் உழவர் உதவியகத்திற்குட்பட்ட கிராம விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உழவர் உதவியக வேளாண் அலுவலர் அமர்ஜோதி தலைமை தாங்கி, பயிர் வளர்ச்சிக்கு தேவையான பேரூட்டச்சத்து மற்றும் நுண்ணுாட்டச்சத்து குறித்து விளக்கினார். வேளாண் அலுவலர் நடராஜன் இயற்கை விவசாயத்தின் மண்வளம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.இணை வேளாண் இயக்குனர் ராகவன் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கரியமாணிக்கம் வேளாண் அலுவலர் சிவக்குமார், ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கிராம விரிவாக்க பணியாளர் முருகையன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X