இந்தியா

ரூ. 200 கோடி மதிப்பு பிணைய பத்திரங்கள் ஏலம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி அரசு நிதித்துறை மூலம், ரூ. 200 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது. இதுகுறித்து நிதித்துறை அரசு செயலர் சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, ரூ. 200 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 9 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பை ( கோட்டை)

புதுச்சேரி : புதுச்சேரி அரசு நிதித்துறை மூலம், ரூ. 200 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளது.

இதுகுறித்து நிதித்துறை அரசு செயலர் சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, ரூ. 200 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 9 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பை ( கோட்டை) அலுவலகத்தில் வரும் டிச., 3ம் தேதி நடைபெறும்.இந்த அரசு பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்பட கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும்.

இந்தவட்டி 6 மாத்திற்கு ஒரு முறை அதாவது ஜூன் 4ம் தேதி மற்றும் டிச., 4 ம் தேதி ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்த பிணைய பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கதக்க தகுதியுடையதாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X