கோர்ட் செய்தி

தமிழ்நாடு

செயின் பறிப்பில் பெண் இறந்த வழக்கு : வழிப்பறி திருடனுக்கு ஆயுள் தண்டனை

Added : நவ 30, 2019
Share
Advertisement
தஞ்சாவூர், செயின் பறிக்கும் போது பெண் கீழே விழுந்து இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தஞ்சாவூர், பரிசுத்தம் நகரைச் சேர்ந்தவர் ஆப்ரஹாம். இவரது மனைவி கோவில்பிள்ளை, 55. இவர் 2016, மே 23ல், திருநெல்வேலிக்கு செல்ல, தஞ்சாவூர் புதிய பஸ்ஸ்டாண்டிற்கு, தனது கணவருடன் பைக்கில் சென்றார். அவர்கள், மன்னர் சரபோஜி அரசுக்கல்லுாரி

தஞ்சாவூர், செயின் பறிக்கும் போது பெண் கீழே விழுந்து இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர், பரிசுத்தம் நகரைச் சேர்ந்தவர் ஆப்ரஹாம். இவரது மனைவி கோவில்பிள்ளை, 55. இவர் 2016, மே 23ல், திருநெல்வேலிக்கு செல்ல, தஞ்சாவூர் புதிய பஸ்ஸ்டாண்டிற்கு, தனது கணவருடன் பைக்கில் சென்றார். அவர்கள், மன்னர் சரபோஜி அரசுக்கல்லுாரி பகுதியில் சென்றபோது, கோவில்பிள்ளை கழுத்தில் இருந்த, 5 பவுன் செயினை, பின்னால் மற்றொரு பைக்கில் வந்த, திருச்சியைச் சேர்ந்த பிச்சைமணி, 40, பறித்தார். அப்போது, தடுமாறி கீழே விழுந்த கோவில்பிள்ளை கீழே விழுந்து இறந்தார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லுாரி போலீசார் வழக்கு பதிவு செய்து, பிச்சைமணியை கைது செய்தனர். இந்த வழக்கு, தஞ்சாவூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், பிச்சைமணிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X