இந்தியா

மருத்துவ மாணவர் விவரம் இணையத்தில் வெளியிட கோரிக்கை

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்க தலைவர் பாலா, தலைமை செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சென்டாக் மூலம் மூன்று தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் 630 மாணவர்கள் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்த்து கொள்ளப்பட்டனர். இதில் மோசடி ஆவணங்கள் மற்றும் போலி சான்றிதழ்கள் மூலம் சில மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதன்பேரில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஷாட்சி, கிருத்திகா என்ற 2 மாணவிகளின் சான்றிதழ்கள் வருவாய்த்துறை ரத்து செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு என பல்வேறு ஒதுக்கீடுகளில் மொத்தமுள்ள 630 இடங்களில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிமாநிலத்தில் நீட் தேர்வை எழுதி சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்ந்துள்ளனர்.ஆகையால் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெற்ற மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் 'நீட்' தேர்வின் அனுமதிச் சீட்டு மற்றும் 'நீட்' மதிப்பெண் ஆகியவைகளை சரிபார்த்து முறைகேடாக சேர்ந்திருக்கும் மாணவர்களை நீக்க வேண்டும்.

மேலும் சென்டாக் மற்றும் சுகாதார இணையதளத்தில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கை பெற்ற அனைத்து மாணவர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ கல்லுாரியில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் 'நீட்' தேர்வை 2 மற்றும் 3வது முறையாகவும் எழுதியுள்ளனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்கள் 'நீட்' தேர்வு பயிற்சியினை வெளிமாநிலத்திற்குச் சென்று, குறிப்பாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று 'நீட்' தேர்வை அங்கேயே எழுதியுள்ளனர்.

அவர்களின் புகைப்படங்கள் மற்றும் 'நீட்' தேர்வு மதிப்பெண் பட்டியலையும் சரிபார்க்க வேண்டும். அதில் தவறு நடந்து இருந்தால் அவர்கள் மீதும், அவர்களுக்கு உதவிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சேர்க்கை பெற்ற இடங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X