இந்தியா

புதுச்சேரியில் இன்று பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் பி.எஸ்.என்.எல். சிறப்பு மேளா இன்று நடக்கிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல்., புதுச்சேரி தொலை தொடர்பு மாவட்ட மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இதர நெட்ஒர்க் மொபைல் எண்களை மாற்றிடவும், புதிய பிரிபெய்டு சிம்கார்டு மற்றும் புதிய லேன்ட் லைன் இணைப்புகளை பெறுவதற்கான பி.எஸ்.என்.எல். சிறப்பு மேளா இன்று 30 ம்தேதி காலை 9.00 மணி முதல் சிறப்பு விற்பனை முகாம்புதுச்சேரி முழுவதும் நடக்கிறது.

புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதி பி.எஸ்.என்.எல். கஸ்டமர் அலுவலகம், மதகடிப்பட்டு, திருவண்டார் கோவில் பஸ் ஸ்டாண்ட், புதுச்சேரி பல்கலைக்கழகம், ஜிப்மர் ட்ராமா கேர், ஏம்பலம், மடுகரை, கரியமாணிக்கம் பஸ் ஸ்டாப், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் கிராஸ் ரோடு, பாகூர், காலாப்பட்டு, லாஸ்பேட்டை, உழந்தைகீரப்பாளையம், அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், மேட்டுப்பாளையம், திருக்கனுார், வில்லியனுார் பி.எஸ்.என்.எல். எக்ஸ்சேன்ஜ் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

மேலும் எப்.டி.டி.எச்., என்கிற நவீன தொழில் நுட்பத்தினால் பைபர் ஆப்டிகல் கேபிள்மூலம் அதி வேக இண்டர்நெட் சேவையும், அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படுகிறது. இச்சேவையை பெறுவதற்கு 0413-2228463, 2223500 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X