சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்

Added : நவ 30, 2019
Advertisement


இலங்கை மற்றும் மலேஷியா நாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக்கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேஷியா தலைநகர், கோலாலம்பூரில் இருந்து, 'ஏர் - ஏசியா' விமானம், நேற்று காலை, 7:25 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த, மலேஷியா நாட்டின் குடியுரிமை பெற்ற, அஸ்ரப் அலி, 40, என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, அவர் அணிந்திருந்த ஆடையில் இருந்து, 18.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 547 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மற்றொரு சம்பவத்தில், இலங்கை தலைநகர், கொழும்பில் இருந்து, 'ஸ்பைஸ் ஜெட்' விமானம், நேற்று முன்தினம் அதிகாலை, 3:40 மணிக்கு, சென்னை வந்தது.அதில் வந்த பயணியர், விமானத்தை விட்டு இறங்கிய உடன், சுங்கத் துறை அதிகாரிகள், வழக்கம் போல் சோதனை செய்தனர்.அப்போது, ஒரு குறிப்பிட்ட இருக்கைக்கு கீழ், சிறிய அளவிலான பார்சல் இருந்தது. அதற்குள் இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 2.67 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X