இந்தியா

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 30, 2019
Advertisement
 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : ஆசிரியர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார். ஆசிரியர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிடை மாற்றம் வழங்க வேண்டும். உடற்கல்வி நுாலகம் மற்றும் நுண்கலை ஆகியவற்றை ஒரு பாடமாக கொண்டு வரவேண்டும்.

பாலசேவிகர் பதவிகளை பிரி-பிரைமரி டீச்சராக மாற்ற வேண்டும். பால்பவன் பயிற்றுனர்களை தொழில்நுட்ப ஆசிரியர் காலி பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி பயிற்றுனர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X