சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் உடையில் வந்து அரிசி லாரி கடத்தல்

Added : நவ 30, 2019
Advertisement


அரூர் :அரூர் அருகே, போலீஸ் உடையில் வந்தவர்கள், டிரைவரை கட்டிப் போட்டு, அரிசி லாரியை கடத்திச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர், மாதேஸ்வரன், 55; லாரி டிரைவர்; இவர், காஞ்சிபுரத்தில் இருந்து, கரூருக்கு, 'டாரஸ்' லாரியில், 900 மூட்டை பொன்னி அரிசி லோடு ஏற்றி, நேற்று முன்தினம் இரவு கிளம்பினார்.
நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, அரூர் - சேலம் சாலையில், விஜயநகரம் அருகே வந்தபோது, போலீஸ் உடையில் பைக்கில் வந்த இருவர், லாரியை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, டாடா சுமோ காரில் நான்கு பேர் வந்துள்ளனர்.
ஆறு பேரும் சேர்ந்து, மாதேஸ்வரனின் கை, கால்கள் மற்றும் கண்ணை கட்டி, லாரியில் இருந்து இறக்கி, டாடா சுமோவில் கடத்திச் சென்றனர். அதிகாலை, 5:30 மணிக்கு, வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே, மாதேஸ்வரனை கீழே தள்ளிச் சென்றனர்.
அப்பகுதியில் ரோந்து வந்த, 'ஹைவே' போலீசாரிடம், மாதேஸ்வரன் புகார் கூறினார். இதையடுத்து, அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
நேற்று மாலை மாதேஸ்வரனிடம், கோபிநாதம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணாக, பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில், கடத்தப்பட்ட அரிசி லாரி, சங்ககிரி அருகேயுள்ள சுங்கச்சாவடியை அதிகாலை, 5:24 மணிக்கு கடந்து சென்றது, தெரிந்தது.
எல்லை பிரச்னையை காரணம் காட்டி, அரூர் மற்றும் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், காலம் தாழ்த்தினர். இறுதியில், கோபிநாதம்பட்டி எல்லைக்கு உட்பட்டது என தெரியவந்ததை அடுத்து, கோபிநாதம்பட்டி போலீசார், நேற்றிரவு வழக்கு பதிவு செய்தனர்.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X