இந்தியா

அடாக் தாசில்தார்கள் 16 பேர் பணி நிரந்தரம்

Added : நவ 30, 2019
Advertisement

புதுச்சேரி : வருவாய் பேரிடர் துறையில் பணியாற்றி வரும் 16 தாசில்தார்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய் பேரிடர் மேலாண்மைதுறையில் கடந்த 2006ம் ஆண்டு20 துணை தாசில்தார்கள் நேரடியாகதேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு தாசில்தார்களாக அடாக் (தற்காலிக)அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இருப்பினும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.வருவாய் துறையில் தாசில்தார்கள் பலர் ஓய்வு பெற்று காலியிடங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து 16 தாசில்தார்கள் தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டரின் தனி அதிகாரி முத்துமீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசின் தலைமை செயலர் அஸ்வினிகுமார், வருவாய் செயலர் அசோக்குமார், வருவாய் சிறப்பு செயலர் அருண் ஆகியோர் கொண்ட வருவாய் துறையின் கமிட்டி கூடி, வருவாய் பேரிடர் துறையில் அடாக் முறையில் புரியும் 16 தாசில்தார்களை பணி நிரந்தரம் செய்தது.

இதன்படி ராஜகோபால், நிரஞ்சன் ராவ், சிவசங்கரன், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், பாலாஜி, சுரேஷ்ராஜ், சவுமியா, ஏ.குமரன், சவுந்தரி, ஷீலா, மேத்யு பிரான்சிஸ், செந்தில்குமார், மகாதேவன், அருண் அய்யாவு, ஆர்.குமரன் ஆகியோர் தாசில்தார்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை வருவாய் செயலரான கலெக்டர் அருண் பிறப்பித்துள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X