புதுச்சேரி : பிருந்தாவனத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
புதுச்சேரி காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், பிருந்தாவனம் மக்கள் குடியிருப்பு நலவாழ்வு சங்கம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச சிறப்பு கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம், பிருந்தாவனம் சதானந்தா விநாயகர் கோவிலில் நடைபெற்றது.முகாமிற்கு ஜிப்மர் மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு மருத்துவர் சுபாஷினி தலைமை தாங்கினார். சுபாஷ்சந்திரபோஸ், முன்னிலை வகித்தார். ஜான்குமார் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசினார்.
முகாமில் மண்டலத் தலைவர் கமல் கிஷோர், வட்டாரத் தலைவர் திருமுருகன், பிருந்தாவனம் மக்கள் குடியிருப்பு நலவாழ்வு சங்க தலைவர் புருசோத்தமன், செயலர் உதயகுமார், லயன்ஸ் கிளப் மூத்த தலைவர்கள் செல்வ காந்தி, ராஜலட்சுமி கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடந்த முகாமில் கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.