கம்பம்காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் 33. இவர் மகள் வர்ஷா 8, நண்பர்களுடன் சபரிமலைக்கு காரில் சென்றார். நேற்று அதிகாலை கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் உள்ள ஆலமரத்தில் கார் மோதியது. இதில், முன்சீட்டில் துாங்கிக் கொண்டிருந்த வர்ஷா, அதே இடத்தில் பலியானார். கார்த்திக், பழனி45 இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement