புதுச்சேரி : த்துப்பிள்ளைபாளையத்தில் பஞ்சரான சாலையின் நடுவே உள்ள 'மெகா சைஸ் பள்ளத்தால்' வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அரும்பார்த்தபுரம் அடுத்த முத்துப்பிள்ளைபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முத்துப்பிள்ளைபாளையத்தில் இருந்து சுல்தான்பேட்டை மற்றும் அரும்பார்த்தபுரம் செல்லும் சாலையில் நடராஜன் நகர் அருகில் சாலை பஞ்சராகி பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால் சாலை சேதமடைந்த பகுதியில் 50 மீட்டர் துாரத்திற்கு மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகி மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.ஆபத்தான வளைவில் உள்ள பள்ளத்தால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ், வேன் டிரைவர்கள், பாதசாரிகள் மற்றும் பள்ளிக்கல்லுாரி மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் சாலை நடுவே உள்ள பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.