புதுச்சேரி : காணாமல் போன வாலிபர், 6 மாதங்களுக்கு பிறகு காப்பகம் மூலம் கண்டறியப்பட்டு மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் 2 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி,21; கடந்த மே மாதம் வீட்டிலிருந்து வெளியே சென்ற தமிழ்மணி மாயமானார். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், துப்பு கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மாயமான வாலிபர் தமிழ்மணியை தேடிவந்தனர். இதுதொடர்பாக புதுச்சேரி மற்றும் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, தமிழ்மணி புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டினர்.
அதில், சென்னையை சேர்நர்த காப்பக நிர்வாகி சகாயமேரி, தங்கள் காப்பகத்தில் 20 வயது வாலிபர் தங்கியிருப்பதாகவும், அவரால் புதுச்சேரி என்பதை தவிர வேறு எந்த தகவலும் கூற மறுப்பதாக கூறினர்.அதன்பேரில், போலீசார் புதுச்சேரி பகுதியில் மாயமானவர்களிடம் புகைப்படங்களை காப்பகத்திற்கு அனுப்பினர். அதில், காப்பகத்தில் இருப்பது தமிழ்மணி என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து போலீசார் சென்னை சென்று, காப்பகத்தில் இருந்த தமிழ்மணியை மீட்டு வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.