இந்தியா

விபசார வழக்கு கொல்கத்தா ஆசாமிக்கு வலை

Added : நவ 30, 2019
Share
Advertisement
பாகூர் : விபசார வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கொல்கத்தாவை சேர்ந்த நபரை பிடிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் அபார்ட்மென்டில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் பேரில், கிருமாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட அபார்ட்மென்டில் அதிரடி

பாகூர் : விபசார வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கொல்கத்தாவை சேர்ந்த நபரை பிடிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் அபார்ட்மென்டில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் பேரில், கிருமாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட அபார்ட்மென்டில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த இரண்டு இளம் பெண்களை மீட்ட போலீசார், 4 ஆண்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், கொல்கத்தாவை சேர்ந்த இரு இளம் பெண்களை வைத்து, விபசாரம் நடத்தி வந்ததும், இதற்கு கொல்கத்தாவை சேர்ந்த பாபு தலைவராகவும், கீழ்அழிஞ்சிப்பட்டு தனுசு, அவரது சகோதரர் வடலுார் சேராக்குப்பம் கெவின் (எ) செல்வம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மணிகண்டன், வளவனூர் குமாரக்குப்பம் சாந்தகுமார் (எ) சரவணன் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.அதன்பேரில் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கொல்கத்தாவை சேர்ந்த பாலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X