இந்தியா

வில்லியனுார் அரசு பள்ளியில் மரம் விழுந்ததில் மாணவிகள் காயம்

Added : நவ 30, 2019
Advertisement

வில்லியனுார் : வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 6 மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் நேற்று பகல் 1:00 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது மாணவிகள் வகுப்பறையில் இருந்து வெளியே வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த பழமை வாய்ந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று திடீரென முறிந்து கீழே நடந்து சென்ற மாணவிகள் மீது விழுந்தது. இதில் மாணவிகள் சங்கீதா, வரலட்சுமி, சந்தியா, பவித்ரா, சாமூண்டீஸ்வரி, முர்ஷிதாபேகம் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அதனைக் கண்டு திடுக்கிட்ட ஆசிரியர்கள், மாணவிகளை மீட்டு வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மாணவியர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.பள்ளியில் விழுந்த வேப்பமரக்கிளையை, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X