இந்தியா

சத்து மாவு கலந்த பால் வழங்கும் திட்டம்

Added : நவ 30, 2019
Advertisement

பாகூர் : கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு, சத்து மாவு கலந்த பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கந்தசாமி துவக்கி வைத்தார்.பள்ளி கல்வித்துறை சார்பில், ராஜிவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் சூடான பாலில் பதாம், சாக்லெட் சுவைகளில் சத்துமாவு கலந்து வழங்கும் திட்டம் காரைக்காலில் துவக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு சத்துமாவு கலந்த பால் வழக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி மாணவர்களுக்கு சத்துமாவு கலந்த பால் வழங்கி சிறப்புரையாற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X