இந்தியா

உலகவாழியம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்

Added : நவ 30, 2019
Advertisement

வில்லியனுார், : அரியூர் உலக வாழியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடைபெறுகிறது.

வில்லியனுார் அடுத்த அரியூரில் அமைந்துள்ள உலக வாழியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை காலை 10:30 மணியளவில் நடைபெறுகிறது.இதற்கான விழா கடந்த 26ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. 27ம் தேதி வாஸ்து சாந்தியும், 28ம்தேதி அரியூர் தாமரை நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து கலசங்கள் புனித நீர் எடுத்தல் நிழ்ச்சியும், இரவு முதல் காலபூஜை, தீபாராதனை நடந்தது.நேற்று காலை இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி மற்றும் புதிய விக்ரகம் கரிக்கோலம் நடைபெற்றது.

இரவு மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு விேஷஷ சாந்தி, 12:30 மணிக்கு நான்காம் கால பூஜை, தீபாராதனையும், இரவு 10:30 மணிக்கு ஐந்தாம் கால பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.நாளை காலை 5:30 மணிக்கு யாகசாலை பூஜை, 6:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 7:30 மணியளவில் ஐயனார், சப்தகன்னிகளுக்கு கும்பாபிேஷகமும், தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும் அதனை தொடர்ந்து 10:30 மணியளவில் விமான கும்பாபிேஷகம், 11:00 மணியளவில் மூலவர் கும்பாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

கும்பாபிேஷக விழா முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சுகுமாறன் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X