பொது செய்தி

தமிழ்நாடு

அரியலூர், பெரம்பலூரில் விடிய விடிய கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

Added : நவ 30, 2019
Advertisement

அரியலூர்: அரியலுார், பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய, விடிய பெய்த தொடர் மழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன; குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.அரியலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 12;00 மணி முதல் நேற்று காலை, 8:00 மணி வரை, பலத்த மழை பெய்தது. 4.5 செ.மீ., பெய்த மழையால், அரியலுார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில், முதுகுளம் செல்லும் சாலையில் உள்ள, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இப்பகுதி மக்கள், முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து, மேடான பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். கடலுார்- - அரியலுார் மாவட்டங்கள் இடையே ஓடும் வெள்ளாற்றில், வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் ஆற்றை கடந்து, மறு கரையிலுள்ள கிராமங்களுக்கு சென்றனர். செங்குந்தபுரம், சிறுகடம்பூரில் இரண்டு வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது.இதேபோல், பெரம்பலுார் மாவட்டத்தில் பெய்த மழையால், கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது. மாவட்டத்தில் நேற்று காலை வரை, 13 செ.மீ., மழை பெய்தது.* 10 ஆடுகள் பலிதஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று காலை, 10:00 மணி வரை நீடித்தது. கும்பகோணம், திருப்பனந்தாளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கென்னடி, 50, என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவர் ஓரம் கட்டியிருந்த, 10 ஆடுகள் உயிரிழந்தன.

இதேபோல், தஞ்சை, கதிராமங்கலத்தை அடுத்த சிற்றிடையாநல்லுார் கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டின் மீது தென்னை மரம் விழுந்து, வீடு முழுவதும் சேதமானது. வீட்டிலிருந்த இரண்டு ஆண்கள் படுகாயமடைந்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
* பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆயினும், காலதாமதமாக, காலை, 8:10 மணிக்கு பின், விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பள்ளிக்கு சென்ற மாணவ - மாணவியர், நனைந்தபடியே மீண்டும் வீடு திரும்பினர்.திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால், நேற்று மதியம் வரை, மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் வெள்ளம்ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நேற்று கனமழை பெய்ததால், பல பகுதியில் தண்ணீர் தேங்கியது. தெற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் மழைநீருடன், லாட்ஜின் கழிவு நீரும் கலந்து தேங்கியது. துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். ரத வீதியில் தேங்கிய மழை நீர் கடலில் கலந்தாலும், தொடர் மழையால் தண்ணீர் தேங்கிய வண்ணம் இருந்தது. ***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X