இந்தியா

காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை

Added : நவ 30, 2019
Advertisement

வில்லியனுார் : காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண், குடும்ப பிரச்னையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த உள்ள பங்கூர்பேட்டை சேர்ந்த அய்யப்பன். இவர் பஸ் நிலையத்தில் உள்ள கூட்டுறவு வாகன ஏஜென்சில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி,24; வெவ்வேறு சமூகத்ததை சேர்ந்த இவர்கள் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாதீஷ்,3; ஜாமீஸ்,1; என்ளற இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் மனமுடைந்த தேவி நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேவிக்கு திருமணமாகி நான்காண்டுகளே ஆவதால், தாசில்தார் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X