தேனி : ஏழை, எளியோருக்கு சேவை செய்வது இறைவனுக்கு செய்யும் தொண்டு என்கிறார் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மனோகரன் 55.
ஓடைப்பட்டி அருகே வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்த இவர் 23 ஆண்டுகள் அப்பணி செய்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை கவனிக்க எட்டு ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். கிராமங்களில் உள்ள ஏழை, எளியோர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை பெற்று தர 5 ஆண்டுகளாக உதவி வருகிறார். பிறப்பு, இறப்பு சான்று, திருமண உதவி, முதியோர் உதவி, மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்தல், மாற்றுத்திறனாளி சான்று, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக்குவது என இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு சத்தமில்லாமல் உதவியுள்ளார்.
எவ்வித பிரதிபலன் பாராமல் சம்பந்தப்பட்டவர்களை அரசு அலுவலகங்களுக்கு அழைத்து வந்து விண்ணப்பம் செய்ய வைக்கிறார். அவர்களுக்கு செலவு வைக்காமல் இவரிடம் உள்ள இலவச பாஸ் பயன்படுத்தி பஸ்சில் பயணிக்கிறார். சில நேரம் உடன் அழைத்து வருபவர்ளுக்கு பஸ் கட்டணம் ,மதிய உணவு செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறார். கிடைக்கும் ஓய்வூதியத்தில் ஏழை, எளியோருக்கு உதவுவதற்காக ஒரு சிறு தொகையை மாதந்தோறும் செலவிடுகிறார்.
மனோகரன் கூறுகையில்,'' பதவியில் இருந்தால்தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என இல்லை. நல்ல மனித நேயம் இருந்தால் போதும். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் எனக்கு கிடைப்பது இல்லை. இதுபோல பிறருக்கு உதவி பயனுள்ள வாழ்க்கை வாழ்வதையே லட்சிமாகக் கொண்டுள்ளேன், என்றார். இவரை பாராட்ட 97503 43574