குடிநீர், இருக்கை வசதியில்லை; பெரியகுளத்தில் பயணிகள் சிரமம்

Added : நவ 30, 2019
Advertisement

பெரியகுளம் : பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட்டில் குடிநீர், இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் நுாற்றாண்டு பழமையான முதல் நகராட்சி பெரியகுளம் ஆகும். பிற நகராட்சிகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் அடிப்படை வசதியின்றி கிடக்கிறது. இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் வந்து செல்கிறது. ஏராளமானோர் பயணிக்கின்றனர்.

நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இரும்பிலான 20 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை திருடுபோனது. பஸ்சிற்கு வெகுநேரம் காத்திருக்கும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இருக்கை இல்லாமல் சிரமப்படுகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் இல்லை. இதனால் தாகத்தில் தவிக்கின்றனர். குடிநீர் வசதி, இருக்கை அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X