ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தின்அமைந்துள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி விட்டன. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய வாகன பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைக்கப்படுவதுடன் விபத்தின்றி போக்குவரத்தினை செயல்படுத்துவதும் அரசின் கடைமையாகும். வாகன ஓட்டிகள் பாதுகாப்புஉத்திகளை மேற்கொண்டாலும் பாதுகாப்பான சாலை என்பது பெரும் சவாலாகவே அமைந்து விடுகிறது. தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிவிபத்துக்கு காரணமாகின்றன.ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு பாதசாரிகள், டூ வீலர்கள் ஒதுங்குவதற்கு என பிளாட்பாரத்தின் அகலமும்அதிகரிக்கப்படுகிறது. ஆனால் கடையினர், தள்ளுவண்டி வியாபாரிகள் இவற்றை தங்களுக்கு சாதகமாக ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் சாலையில் செல்வோரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலை பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன.பஞ்சு மார்க்கெட் முதல் ஒன்றிய அலுவலகம் வரை இருபுறமும் வீடுகள், கடை வைத்திருப்பவர்கள் ரோட்டின் எல்லை வரையில்நீட்டிப்பு செய்துள்ளனர்.ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அடுத்த சிலநாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இதே நிலைதான் டி.பி .மில்ஸ் ரோட்டிலும், பி.ஏ.சி.ஆர் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, முடங்கியாறு ரோட்டிலும் காணப்படுகிறது.
ராஜபாளையம் மங்கம்மாள் சாலை அகலமான ரோடாக போக்குவரத்திற்கு வசதியாக இருந்து வந்தது. ஆனால் அதை மீட்பதற்கான நடவடிக்கையில் ஆக்கிரமிப்பாளர்கள் ஒத்துழைப்பு இல்லை. அதிகாரிகளும் தகுந்த முயற்சிமேற்கொள்வதில்லை. நகரில் நுழையும் போது உள்ள 120 அடி ரோடானது பாதிக்கும் மேல் சுருங்கி விட்டது. இங்கு 1938 ல் அமைக்கப்பட்டமின் கம்பங்களை ரோட்டோரம் கொண்டு செல்லவும் முயற்சிக்கவில்லை. உயர்நீதி மன்றத்திலும் வழக்கு நடத்தி வருகிறேன்.- ராம்ராஜ், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர், ராஜபாளையம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE