இந்தியா

டோல்கேட் ஊழியர்கள் போராட்டம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : டோல்கேட் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வாகனங்கள் சுங்க கட்டணமின்றி சென்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடூர், சேலம் மாவட்டம் நத்தக்கரை, மேட்டுபட்டி, நாமக்கல், ஒசூர் ஆகிய டோல்கேட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய

கள்ளக்குறிச்சி : டோல்கேட் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வாகனங்கள் சுங்க கட்டணமின்றி சென்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடூர், சேலம் மாவட்டம் நத்தக்கரை, மேட்டுபட்டி, நாமக்கல், ஒசூர் ஆகிய டோல்கேட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளர் ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழ்நாடு சுங்கசாவடி பணியாளர்கள் சங்கம் மூலம், சேலம் மண்டல தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில, நேற்று 5ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொழிலாளர் ஆணையர் அண்ணாதுரை முன்னிலையில், தமிழ்நாடு சுங்கசாவடி பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரவி, பொது செயலாளர் காரல்மார்க்ஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டோல்கேட் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட்டில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பகல் 12 மணியளவில் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் திறந்து விடப்பட்டன.

இதுபற்றி தகவலறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் உளுந்துார் பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் சுங்க கட்டணமின்றி சென்றது.இதேபோல், நத்தக்கரை, மேட்டுபட்டி, நாமக்கல், ஒசூர் டோல்கேட் ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வரும் 4ம் தேதி, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால், மாலை 4.00 மணியளவில், டோல்கேட் ஊழியர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டு பணிக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X