சமுதாய நோக்கமும்... | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமுதாய நோக்கமும்...

Added : நவ 30, 2019
Share
தேவதானப்பட்டி : சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் சஞ்சய்குமார். இவர் சிறுவயது முதல் சமுதாயத்தில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டுள் ளார்.இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளில் படித்த மாணவர்கள் சிலர், கல்கவாரியை வெடி வைத்து தகர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்\ குறித்து சிறப்பு ஆய்வு செய்து தேசிய

தேவதானப்பட்டி : சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் சஞ்சய்குமார். இவர் சிறுவயது முதல் சமுதாயத்தில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டுள் ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளில் படித்த மாணவர்கள் சிலர், கல்கவாரியை வெடி வைத்து தகர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்\ குறித்து சிறப்பு ஆய்வு செய்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வு சஞ்சய்குமாருக்கு ஊக்கம் தந்தது. சாதிக்க வேண்டும் என்ற இவரின் லட்சியத்திற்கு மேலும் வலுவூட்டியது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் உதவியுடன் மருத்துவத்துறை நிபுணர்களை சந்தித்து, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய், அதன் பாதிப்புகள், தவிர்க்க, குணமடைய வழிமுறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றார்.

மேலும் மாநில அளவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். தொடர்ந்து கிடை அமர்த்தும் மாடுகள் பற்றி ஆய்வு செய்துள்ளார். சமுதாய நோக்கத்தோடு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சஞ்சய் குமார் கூறியதாவது:பிறந்தோம், படித்தோம், வேலைக்கு சென்றோம் என்றில்லாமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து காட்ட வேண்டும் என்று யோசித்து தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.

குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடியகர்ப்பப் பை வாய் புற்று நோய் குறித்து ஆய்வு செய்து மாநில அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டேன். என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் தலைமை ஆசிரியர் மோகன், ஆசிரியை தமிழ்செல்வி, மாணவர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர், என்றார்இவருக்கு சபாஷ் கூற 81225 39212

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X